கந்து வட்டிகாரர்கள் ஓடி விடுங்கள் : விஷால் எச்சரிக்கை


இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் கம்பெனி பிரோடக்ஷன்ஸ் நிறுவனத்தை கவனித்து வந்தவர் அவரின் உறவினர் அசோக் குமார். இந்நிலையில் நேற்று அவர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை கொண்டுள்ளார்.

அவருக்கு கடன் கொடுத்தவர் குடும்பத்தை தூக்கிவிடுவதாக மிரட்டியதால் தான் தற்கொலை செய்வதாக எழுதி வைத்தருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால் கந்து வட்டிக்காரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  அதில் இனிமேலாவது தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்து வட்டிகாரர்கள் திருந்தி சினிமாவை விட்டு ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.