ஜஸ்டிக் லீக் படத்தின் தமிழ் பாதிப்பு வெளியாவதில் சிக்கல்


வார்னர் ப்ரோஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள ஜஸ்டிஸ் லீக் படம் உலகம் முழுவது கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. அந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தியாவிலும் இந்த படம் ஆங்கிலதில் வெளியாகியுள்ளது. 

ஆனால் மற்ற மொழிகளில் இந்த படம் வெளியாகவில்லை. அதற்கு காரணம் இந்திய சென்சார் போர்டு கொண்டு வந்த புதிய விதி. அதன் படி படம் வெளியாவதற்கு 68 நாட்கள் முன்பு தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

இது தற்போது அறிவிக்கப் பட்ட விதி என்பதால் படக்குழுவால் முன்பே விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் மற்ற மொழிகளில் படம் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் இந்த புதிய விதியிலிருந்து விளக்கு கேட்டுள்ளது. விலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.