கமலஹாசனை சந்தித்த டி.ஐ.ஜி. ரூபா


நடிகர் கமலஹாசன் அடிக்கடி அரசியல் பற்றி ட்விட்டரில் விமர்சனம் செய்துவந்த நிலையில் அரசியலில் இறங்க போவதாக வெளிப்படையாக அறிவித்தார். அவரது பிறந்த நாளன்று ரசிகர்களை சந்தித்தார் கமலஹாசன்.

இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமலஹாசன் விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் ரசிகர்களையும் சந்திக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளார். 

அதே நிகழ்ச்சியில் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவும் கலந்து கொண்டார். இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவர் தான் சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.