சிங்கப்பூர் மருத்துவமனைக்கு செல்கிறார் விஜயகாந்த்


சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார் நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் சில நாட்கள் அரசியலில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார்.பிறகு மீண்டும் அரசியலில் ஈடுபட தொடங்கினார். 

வருடந்தோறும் அவர் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வது வழக்கம். இந்நிலையில் அவர் தற்போது பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்கிறார். ஒரு வாரம் தங்கியிருந்து பரிசோதனை செய்துகொண்டு இந்தியா திரும்புகிறார்.