வெளியான சில நிமிடங்களில் ட்ரெண்டான தல படத்தின் டைட்டில்


அஜித் நடிப்பில் டைரக்டர் சிவா இயக்கிய விவேகம் படம் சமீபத்தில் வெளியானது. அதன் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியானது.

அஜித்தின் 58வது படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு விசுவாசம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த டைட்டில் வெளியான 10 நிமிடத்தில் சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.