அதர்வா மேகா ஆகாஷ் நடிக்கும் புதிய படம்


ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் இவன் தந்திரன். ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆர்.ஜே.பாலாஜி நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கண்ணன் தனது அடுத்த படத்தில் அதர்வாவை இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்திற்க்கு இசையமைப்பாளர் 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு இசையமைத்த ரதன். ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.