ரஜினி ரசிகர்கள் சந்திப்பு தள்ளிபோகிறதா ?


1996ல் இருந்து ரஜினியும் அரசியலும் பிரிக்க முடியாதது ஆகிவிட்டது. அவ்வப்போது ஒரு சில அரசியல் காட்சிகளை ஆதரித்தது வாய்ஸ் கொடுப்பார்.

அவரது ரசிகர்களும் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து வந்தனர் . இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திந்தார். அப்போது  ரசிகர்களிடம் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார் . அது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தான் ரஜினி தனது பிறந்தநாளான டிசம்பர் 12ல் ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது ரசிகர்கள் சந்திப்பு டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.