புலி படம் ஃபிளாப் ஆனதற்கு காரணம் சொல்கிறார் அதன் ஒளிப்பதிவாளர்


விஜய்யின் கேரியரில் மறக்க முடியாத படம் புலி. மிகவும் எதிர்பார்க்க பட்ட இந்த படம் மிகப் பெரிய தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ் கூறியுள்ளார். ஒரு நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது :

"புலி படத்தில் விஜய் நடிக்க காரணம் குழந்தை ரசிகர்களுக்காக மட்டும்தான். குழந்தைகள் என்றால் விஜய் சாருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் அந்தப் படத்தையே விஜய் பண்ணினார். ஆனால், படத்தின் ப்ரோமோஷனின் போது 'புலி' படத்தை ஒரு ஆக்‌ஷன் படமாகக் காட்டிவிட்டார்கள். அது தான் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது" என்று கூறினார்.

இவர் தான் சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.