அஜித்தை வைத்து விளம்பரம் தேட வில்லை : ரசிகர் கேள்விக்கு சுசீந்திரன் பதில்


கந்து வட்டி கொடுமையால் இயக்குனர் சசி குமாரின் உறவினர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பலரும் அதற்கு காரணமான அன்புசெழியன் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். 

இயக்குனர் சுசீந்திரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தார். அதில் அவர், நான் கடவுள் சமயத்தில் நடிகர் அஜித்தும் அன்பு செழியனால் மிரட்டப்பட்டார் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர் ' அப்போது பேசாமல் இப்போது ஏன் சொல்கிறீர்கள் அன்பு விடம் நீங்களும் பணம் வாங்கியிருக்கிறீர்களா அஜித்தை வைத்து ஏன் விளம்பரம் தேடுகிறீர்கள் ?' என்று கேட்டார் அதற்கு பதிலளிக்கும் வகையில் 'நான் யாரிடமும் 1ருபாய் கூட வாங்கியது இல்லை, விளம்பரம் தேட வேண்டிய  அவசியம் எனக்கு இல்லை அன்பு செழியனை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே கூறினேன்' என்று தெரிவித்துள்ளார்.