அறம் படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் !சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் படம் அறம். கோபி நைனார் இயக்கியுள்ள இத்திரைப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். சமூக பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளதால்  இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது. பல்வேறு பிரபலங்கள் இந்த திரைப் படத்தை பாராட்டியுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்த்து பாராட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. ரஜினியின் வார்த்தைகள் மேலும் கடினமாக போராடுவதற்கு உந்துதலாக இருப்பதாக அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் தங்களது படத்தை பாராட்டியுள்ளது படக் குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரமான படங்கள் வரும் போதெல்லாம் ரஜினிகாந்த் அதை பாராட்டுவதில் இருந்து தவறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.