மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி வசனங்களுக்கு மியூட் செய்யப்பட்டது !


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் மெர்சல். படத்தில் இருந்த ஜி.எஸ்.டி  குறித்த வசனங்கள் கடும் சர்ச்சையை கிளப்பியது. பா.ஜ.க தலைவர்கள் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் படத்திற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. இருப்பினும் படத்தில் அந்த வசனங்கள் நீக்கப் படவில்லை.

இந்த படத்தின்  தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' யின்  தணிக்கையில் சிக்கல் எழுந்தது. இறுதியில் தணிக்கை முடிந்து இப்படம் நவம்பர் 9 அன்று வெளியானது. தெலுங்கு பதிப்பில் சர்ச்சைக்குரிய ஜி.எஸ்.டி குறித்த வசங்கள் மியூட் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. மெர்சல் படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிட தக்கது.