மந்த்ராலயாவில் ரஜினி சாமி தரிசனம்நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி இமய மலை சென்று பாபாஜி குகையில் தியானம் செய்வது அவர் வழக்கம். 

இன்று அவர் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயா எனப்படும் ராகவேந்திரரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் ராகவேந்திரரின் பக்தர் என்பதும் அதன் காரணமாகவே அவர் ராகவேந்திரா என்ற திரைப்படத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்தால் கட்டப்பட்ட ஆசிரமம் ஒன்று இமயமலையில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது