ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து


ஆந்திர அரசு வருடந்தோறும் என்.டி.ஆர். தேசிய விருது என்ற பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். 2016ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய சினிமா விருதுகள் அறிவித்துள்ளது. 

அந்த பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விருது பெற்றதற்காக நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2014 ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய கமலஹாசனுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான நன்றியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி நன்றியும், கமல் விருது பெறுவதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.