இலங்கை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கியது ஏன் ?


இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் பங்கேற்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. 

அவருக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. நல்ல ஃபார்மில் இருக்கும் பாண்டியனை நீக்கியது ஏன் என்று கேள்விகள் எழுந்தன.இந்நிலையில் அதற்கு பாண்டியவே விளக்கம் அளித்துள்ளார்.  

அவரே ஒய்வு கேட்டதால் தான் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க தொடருக்கு தன்னை தயார் படுத்திக்கொள்வதற்காகவே அவர் ஒய்வு கேட்டதாக தெரிவித்தார்.