எந்திரன் படத்தின் மொத்த வசூலை முறியடிக்குமா மெர்சல் ?


கடந்த தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். படத்தில் பல சமூக பிரச்சனைகள் குறித்து விவாத்தித்துள்ளனர்.  அதனால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

படத்தில் ஜி.எஸ்.டி. குறித்த வசனங்களால் ஒரு சிலர் அதற்கு எதிப்பு தெரிவித்தனர். இதனால் படத்திற்கு வசூல் இன்னும் அதிகமானது. அதன் பிறகு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் படத்தின் வசூல் 250 கோடி என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது எந்திரன் படத்தின் மொத்த வசூலான 292 கோடியை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது .

தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக கபாலி இருப்பது குறிப்பிடத்தக்கது.