கட்சி அறிவிப்பு எப்போது யாருடன் கூட்டணி : கமல் தகவல்


நடிகர் கமலஹாசன் அடிக்கடி அரசியல் பற்றி ட்விட்டரில் விமர்சனம் செய்துவந்த நிலையில் அரசியலில் இறங்க போவதாக வெளிப்படையாக அறிவித்தார். அவரது பிறந்த நாளன்று ரசிகர்களை சந்தித்தார் கமலஹாசன்.

இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமலஹாசன் விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் ரசிகர்களையும் சந்திக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளார். 

அது மட்டுமின்றி சித்தாந்த அடிப்படையில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் மக்கள் நலன் அடிப்படையில் மட்டுமே கூட்டணி என்றும் கூறியுள்ளார்.