பலூன் ரிலீஸ் தேதி அறிவிப்பு !ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர்  நடிப்பில் புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பலூன்'. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து , இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றியது. இந்தப் படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்க்கு முன்பு பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டு பின் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.