கமல் அல்லது அஜித் முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும் : சுசீந்திரன்


நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. கமலஹாசன் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ரஜினிகாந்த் இன்னும் அறிவிக்கவில்லை.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில்  இயக்குனர் சுசீந்திரன் அதுபற்றி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். 

அதில் 'சினிமா துறையில் யார்  முதல்வராவதற்கு தகுதியுடையவர்கள் என்ற கேள்விக்கு எனது பதில் அஜித் சார் மற்றும் கமல் சார் வந்தால் நன்றாக இருக்கும்' ஏற்று குறிப்பிட்டிருந்தார்.