அஜித், சிவா இணையும் படத்தை விரைவில் முடிக்க திட்டம்


நடிகர் அஜித் மற்றும் 'சிறுத்தை' சிவா இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி உள்ளனர். 

அதில் வீரம் மாறும் வேதாளம் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் விவேகம் படம் விமர்சன ரீதியில் வெற்றி பெற விட்டாலும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அஜித் தனது அடுத்த படத்தில் சிவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளர். 

விவேகம் படத்திற்கு நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அது போல் இல்லாமல் இந்த படத்தை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.