மணிரத்னம் படத்திற்கான பணிகளை தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்


இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  சிலம்பரசன், பகத் பாசில், விஜய் சேதுபதி , ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 

இந்த படத்திற்கான இசையமைக்கும் பணிகளை ரஹ்மான் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகள் கோவாவில் தொடங்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிரத்னம் ரஹ்மான் கூட்டணியில் பல படங்களின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது .