தொடங்கியது சிவகார்திகேயனினின் அடுத்த படம் : ஃபர்ஸ்ட் லுக் எப்போது



சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வந்தார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 12வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தை 'ரஜினி முருகன்' படத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.