'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் அடுத்த படம்


ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் அவரே நடித்து வெளியிட்ட படம் மீசைய முறுக்கு. அந்த படத்தில் ஆத்மிகா நாயகியாகவும் ஆர்.ஜெ. விக்னேஷ் , ம.க.பா. ஆனந்த், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு அவரே இசையமைத்திருந்தார். குஷ்புவின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆதியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அவ்னி மூவிஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறார் ஆதி. சுந்தர்.சி தற்போது கலகலப்பு 2 படப்பிடிப்பில் உள்ளார். அது முடிந்ததும் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.