தீபிகா தலை வேண்டும் கமல் ட்வீட் !


பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் பத்மாவதி. படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்து அதன் மீதான சர்ச்சைகளும் ஆரம்பித்தன. 

ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்தரிக்கப் படுவதாக கூறி பலரும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கூறினர்.இந்நிலையில் ஹரியானா மாநில பா.ஜ.க தலைவர் ஒருவர் தீபிகாவின் தலையை எடுப்பவருக்கு 10 கோடி ருபாய் பரிசு அறிவித்துள்ளார் .

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபிகாவிற்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் கமலஹாசனும் தனது ஆதரவை பத்மாவதி படத்திற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்று கூறி  இடைவெளிவிட்டு காப்பாற்ற வேண்டும் அவரின் உடலை தாண்டி, சுதந்திரத்தை தாண்டி மரியாதை தரவேண்டும். பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.