தீரன் பாலிவுட் படத்தின் சாயலில் உள்ளது : நடிகர் விவேக்


கார்த்தி நடிப்பில் சதுரங்கவேட்டை வினோத் இயக்கிய படம் தீரன் அதிகாரம் ஒன்று. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்த இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. 

தமிழ் நாட்டில் 1995 முதல் 2005 வரை நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் இந்த படத்தை பாராட்டியிருக்கிறார். இது பாலிவுட் படமான சோலே படத்தின் சாயலில் இருப்பது தவிக்க முடியாதது என்றும்  இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் தெரிவித்துள்ளார்.