'பொல்லாதவன்' பத்து ஆண்டுகள் நிறைவு : தனுஷ் நெகிழ்ச்சிதனுஷ் மற்றும் வெற்றி மாறன் இணைந்து பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த கூட்டணி மீண்டும் வடசென்னை படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் இன்றுடன் பொல்லாதவன் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது இதையொட்டி நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர்

''10 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தான் 'பொல்லாதவன்' வெளியானது. எங்களின் பயணத்தில் இருவரும் இன்னும் கற்றுக்கொண்டே வருகிறோம். இதோ இப்போது 'வட சென்னை' படப்பிடிப்பில்'' என்று பதிவிட்டுள்ளார்.

தனுஷ்  தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் . 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம், வடசென்னையில் இருக்கும் ஒரு தாதாவின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் விதமாக உருவாகிறது.