பைனான்சியர் அன்புசெழியனை பிடிக்க தனிப்படை


சசிகுமாரின்  தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த அவரது உறவினர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை கொண்டுள்ளார். இது குறித்து அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் அன்பு செழியன் என்பவரிடம் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி கட்டி விட்டதாகவும், இருப்பினும் அவர் மிரட்டுவதாகவும், குடும்பத்தை தூக்கி விடுவேன் என்றும் மிரட்டுவதால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்பு செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை  பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.