விஜய் முருகதாஸ் இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் ?


சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்தாலும் படத்தின் வசூல் 250கோடியை தொட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் முருகதாசுடன் இணைய உள்ளார். ஏற்கனவே இவர்கள் இணைந்து கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

முருகதாஸ் இந்த படத்தை 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் அனிருத் இசையமைக்கவே அதிக வாய்ப்பு என்கின்றனர்.