இந்தியா வருகிறார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்


பிரபலமான ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் தனது புதிய படமான ப்ரைட் படத்தின் பிரிமியர் காட்சிக்காக மும்பை வரவிருக்கிறார்.

இந்தியாவில் ஒருசில ஹாலிவுட் நடிகர்களே பிரபலம். அதில் வில் ஸ்மித்தும் ஒருவர். அவரின் பல படங்கள் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் வில் ஸ்மித் நடித்து வெளியாகவுள்ள ப்ரைட் படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் நடைபெற உள்ளது.

அதற்கு வில்ஸ்மித் கலந்து கொள்ளவிருக்கிறார். மேலும் இந்த படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.