சூர்யாவை இயக்க கதை ரெடி : கார்த்தி


நடிகர் கார்த்தி அவரது அண்ணன் சூர்யாவை வைத்து படம் இயக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்நிலையில் நடிகர் கார்த்தி ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அதில் ரசிகர் ஒருவர் சூர்யாவை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேட்டதற்கு 'உதவிஇயக்குநராக இருந்தபோதே அண்ணனுக்காக கதை எழுதி வைத்திருக்கிறேன். அவருக்கு பிடித்திருந்தால் அவரை இயக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.