ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் : ராதிகா ஆப்தே


சமீபத்தில் ஹாலிவுட் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கினர். பின்பு அது பாலிவுட்டிலும் பரவியது. பல நடிகைகளும் இது குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினர்.

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே இது குறித்து கருத்து கூறியுள்ளார். அதில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது உண்மை தான். நடிகைகள் மட்டும் அல்ல ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

அனால் இதைப்பற்றி யாரும் வெளியில் சொல்வதில்லை . பெண்களோ ஆண்களோ யாராக இருந்தாலும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்  என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.