ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதோடு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் இசையை பற்றிய கதைக்களம் கொணடது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக இணைந்திருக்கிறார்.

லதா இந்த படத்தை தயாரிக்கிறார். நா.முத்துக்குமார் , மதன் கார்க்கி, அருண்ராஜா ஆகியோர் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கின்றனர்.