மீண்டும் தொடங்கியது விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு


கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் விஸ்வரூபம். படம் வெளிவந்த சமயத்தில் அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்ததால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

அந்த நேரத்தில் படம் வெளியாகவில்லை என்றால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறினார். இது ரசிகர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிறகு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு படம் வெளியானது.

அந்த படம் மாபெரும் வசூல் சாதனையையும் செய்தது. அந்த படத்திலேயே அடுத்த பக்கம் வரும் என்று குறிப்பிட்டிருந்தனர். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்தநிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதுகுறித்த புகைப்படத்தை கமல்ஹாசன் டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.