ஓ.பி.எஸ் ஐ கலாய்த்து தமிழ் படம் 2.0 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த படம் தமிழ்ப்படம். திஷா பாண்டே,மனோபாலா,வெண்ணிற ஆடை மூர்த்தி,எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.

முழு நீள காமெடி படமான உருவான இந்த படம் மற்ற தமிழ் படங்களை கலாய்த்து எடுக்குப்பட்டிருந்தது. மாபெரும் வெற்றிபெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கவிருக்கிறார் சி.எஸ் அமுதன்.

இந்நிலையில் தமிழ்ப்படம் 2ஆம் பாகத்திற்கான பூஜை சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இன்று அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ்.தியானம் செய்தததை கலாய்ப்பது போல் உள்ளது. போஸ்டர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .