சிங்கம் 3 சாதனையை முறியடித்தது தீரன்'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி ரகுல் ப்ரீத் சிங் நடித்த படம் தீரன் அதிகாரம் ஒன்று.

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படத்திற்கு காவல் துறையினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தற்போது தீரன் படம் சென்னை நகரின் வசூலில் சூர்யாவின் எஸ்3 வசூலை முறியடித்துள்ளது. தீரன் வசூல் 5.80 கோடியை தொட்டுள்ளது. சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த வசூல் 5.30 கோடியாகும்.