சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் விஜய் 62


விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் இது. 

கத்தி படத்திற்கு பிறகு விஜய் முருகதாஸ் இணையும் படம் என்பதால் இதற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இது குறித்த அறிவிப்பை  தனது ட்விட்டர் பக்கத்தில்  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.