8 தோட்டாக்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்


ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கேரக்டரில் நடித்து வெளிவந்த படம் 8 தோட்டாக்கள். இந்த படத்தில் அபர்ணா, நாசர், 'மைம்' கோபி, வெற்றி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

திரில்லர் படமாக உருவான இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் இந்த படத்தை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு கௌரவமாக இந்த படம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள கலாச்சார விழாவில் இன்று (டிசம்பர் 16) திரையிடப்படுகிறது.