ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா, விஷால், விஜய் சேதுபதி படங்கள்


2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு சூர்யா, விஷால் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் வெளிவர இருக்கின்றன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதலில் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாவதாக    அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்திருந்தார். 

விஷால் நடித்துள்ள இரும்பு திரை படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.