பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியது 'இரும்புத்திரை'


'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடிகர் விஷாலே தயாரிக்கிறார். 

இந்நிலையில் இரும்புத்திரை படத்தின் இரண்டாவது போஸ்டரை விஷால் வெளியிட்டுள்ளார். அதில் இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்ட நிலையில் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் மீதம் உள்ளது. அதை விரைவில் முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளனர்.

முதலில் இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.