விக்ரம் படத்தில் நடிக்கும் டி.டி.


விஜய் டி.வி.யில் தொகுப்பாளினியாக இருந்து புகழ்பெற்றவர் திவ்யதர்ஷினி. அவரை டி.டி. என்று அனைவரும் அழைக்கின்றனர். சின்னத்திரையில் அவருக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

அதை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் அவர் நடித்திருந்தது அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் அவர் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.