பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் இன்று காலமானார்.


பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழில் சீவலப்பேரி பாண்டி, அமரன், மாமன் மகள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஆதித்யன். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் இசையமைத்திருக்கிறார்.

இசையமைப்பது மட்டுமல்லாது அவர் இசையமைக்கும் படங்களில் பல பாடல்களை பாடியிருக்கிறார். 

அவர் இன்று ஐதராபாத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 63.