காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு


நடிகரும் காலா படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் காலா படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டார்.

கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் தனது அடுத்த படத்திலும் ரஜினியை இயக்குகிறார். இந்த படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் இரண்டாவது போஸ்டரை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டார். திரையுலகை சேர்ந்த பலரும் அந்த போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.