மாநகரம் படத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்


சந்தீப் கிஷன்,ஸ்ரீ, ரெஜினா, 'முனீஷ்காந்த்' ராமதாஸ், மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் மாநகரம். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஜாவித் ரியாஸ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பெரும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு மற்றொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இன்று (டிசம்பர் 15) சென்னையில்  நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரைப்படவுள்ளது.