கார் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய கெளதம் மேனன்


இயக்குநர் கவுதம் மேனின் சொகுசு கார் விபத்துக்குள்ளானதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த இயக்குநர் கவுதம் மேனின் சொகுசு கார் செம்மஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்த போது டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் கவுதம் மேனின் சொகுசு கார் கடும் சேதமடைந்தது . இதில் அதிர்ஷ்டவசமாக கவுதம் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.