காலா படத்தின் ரிலீஸ் எப்போது ? வெளிவந்த தகவல்


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே , தன்ஷிகா, 'அட்டகத்தி' தினேஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் கபாலி. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் தனது அடுத்த படத்திலும் ரஜினியை இயக்குகிறார். இந்த படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தை ஆகஸ்ட் 15 ஆம்  தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பு ரஜினியின் 2.0 படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.