அருவி படத்திற்காக வருத்தம் தெரிவித்தார் அதன் தயாரிப்பாளர்


அருண் பிரபு இயக்கத்தில் புதுமுக நடிகை அதிதி பாலன் நடித்திருக்கும் படம் அருவி. வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கடந்த டிசம்பர் 15 வெளியானது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகின்றன. பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 

 'இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!' என்று கூறியுள்ளார்.