தயாரிப்பாளருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை : சிம்பு


சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் 'அன்பானவன் அசரதவன் அடங்காதவன்'. ஷ்ரேயா தமன்னா மற்றும் பலர் நடித்த இந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் சிம்பு மீது குற்றம் சுமத்தியிருந்தார். படத்தின் தோல்விக்கு சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வராதது தான் கரணம் என்றும் அவரால் தனக்கு 20கோடி ருபாய் நஷ்டம் என்றும் தெரிவித்திருந்தார்.

சிம்பு அதற்கு பதிலளிக்கும் வகையில், படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொது தான் தயாரிப்பாளருக்கு பதில் சொல்லமுடியும். படம் முடிந்து வெளியான பிறகு தயாரிப்பாளருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.