அஜித் படத்தின் ஹீரோயின் கீர்த்தியா அனுஷ்காவை ?


அஜித் நடிப்பில் 'சிறுத்தை ' சிவா இயக்கிய படம் விவேகம். இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் நல்ல வசூலை பெற்றது.

இந்நிலையில் அஜித் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

கீர்த்திசுரேஷ் விஜய் படத்தில் நடிக்கவுள்ளதால் அவரிடம் தேதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அனுஷ்காவும் தெலுங்கில் பிசியாக இருப்பதால் அவரிடம் தேதி கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.

இருப்பினும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு வாரத்தில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.