ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரஜினி ?


இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நடத்தும் இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுவதும்  பிரபலமான இசையமைப்பாளர். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய பெருமைக்குரியவர். அவர் ரஜினியின் சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அது மட்டுமின்றி அவர் ரஜினியின் ரசிகன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினிக்கும் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது. இதனால் வரும் டிசம்பர் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர்ஸ்டார்களை சந்திக்க ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.