இளம் நடிகர்களை என்றுமே ஊக்குவிப்பவர் விஜய் : சிபிராஜ் பேச்சு


சிபி ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சத்யா. விமர்சன ரீதியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்த படத்திற்கு சைமன் இசையமைத்திருக்கிறார்.

ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதிஷ், யோகி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையி நடிகர் விஜய் சிபி ராஜுக்கு ஃபோன் செய்து சத்யா படத்திற்காக வாழ்த்து தெரிவித்திருந்தார். அது குறித்து சத்யா வெற்றி விழாவில் பேசிய சிபி, நடிகர் விஜய் இளைஞர்களை ஊக்குவிக்க என்றுமே தவறியதில்லை என்று கூறினார்.