பொங்கலுக்கு வெளியாகிறது மதுரை வீரன்


விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் மதுரை வீரன். இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'சகாப்தம்' படத்திற்கு பிறகு மதுரை வீரன் படத்தில் நடிக்கத் தொடங்கினார் சண்முகபாண்டியன். பி.ஜி.முத்தையா இயக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் போன்றோர் நடிக்கின்றனர்.

ஏற்கனவே பொங்கலுக்கு சூர்யா, விஜய்சேதுபதி, விஷால் படங்கள் வரவுள்ளநிலையில் இந்த படமும் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது.